Open top menu
Thursday 16 October 2014

                  


                     அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, உங்களது பெயரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவதற்கு முன்பு அவர்களின் பெயர்களை சேகரித்து அனுப்புகிறோம் என்று நாசா நிறுவனம் கூறியுள்ளது. முதல் கட்டமாக நாசாவின் ஓரியன் மிஷன் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மக்களின் பெயர்களை கொண்டு சென்றுவிடும். பின்பு பசிபிக் பெருங்கடலுக்கு திரும்பி தரையிறங்கும். மேலும் நாசா நிறுவனம் பதிவு செய்த ஒவ்வொரு நபருக்கும் ஒரு போர்டிங் பாஸ் கொடுக்கும். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதுவரை 5 லட்சத்துக்கு மேல் போர்டிங் பாஸ் சமர்ப்பிக்கப்பட்டது என்று நாஸாவின் இணையதளம் கூறியுள்ளது.

இந்த Mars First's Orion Test ல் United States அடுத்து இந்தியாவில்தான் அதிக மக்கள் போர்டிங் பாஸ்களை பதிவு செய்துள்ளனர். இதனை கிழே உள்ள நாசா மேப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும்  1,25,000 மேல் பதிவு செய்து உள்ளனர். இதிலிருந்து நாம் மக்கள் விண்வெளி ஆராய்சியில் எவ்வளவு ஆர்வம் உள்ளவர்கள் என்பது தெரிகிறது.



நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுடைய போர்டிங் பாஸ் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். 


            செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயர்களை அனுப்புவதற்கு நீங்கள் விண்ணப்பிக்க http://mars.nasa.gov...n-first-flight/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின்பு உங்களின் பெயர், இமெயில் அட்ரெஸ் போன்றவற்றை பதிவு செய்து சப்மிட் என்ற பட்டனை அழுத்தவும். பிறகு தானாகவே உங்களுடைய போர்டிங் பாஸ் திரையில் தெரியப்படும், அதனை அடையாளமாக நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். என்னுடைய போர்டிங் பாஸ் கிழே  காண்பிக்கப்பட்டுள்ளது.



தற்செயலாக உங்களுடைய போர்டிங் பாசை தவறவிட்டால், மீண்டும் அடுத்த மிஷனில் நீங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 30ம் தேதி ஆகும்.

இதுபோன்ற அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற தகவல்களுக்கு  Subscribe [SkyfreeTamil] செய்யுங்கள். இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள். 
  • 0

Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments