Open top menu
Friday, 30 January 2015
கணினியில் What's App Chat செய்யலாம்

         
        வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் வெப் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் வெப் ப்ரவுஸர்களிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் இணையம் மூலம் அறிவித்தது. மொபைல் செயளியின் கூடுதல் வடிவம் தான் இந்த இணைய பக்கம். இங்கும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுதத முடியும். மாதம் 700 மில்லியன் பயனாளிகளை கொண்டிருக்கும் வாட்ஸ்ஆப் செயளியை கணினியில் பயன்படுத்த முடியாத நிலை நிலவி வந்தது.


தற்சமயம் இந்த நிலையை மாற்றியமைத்திருக்கின்றது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதற்கு முன் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த ப்ளூஸ்டாக்ஸ் என்ற செயளியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் இனி அந்த அவசியம் ஏற்படாது. மேலும் கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த கூகுள் க்ரோம் ப்ரவுஸர் சென்று அங்கு காணப்படும் ஸ்கேனர் பகுதியில் உங்களது மொபைலை ஸ்கேன் செய்தால் போதுமானது. இந்த வசதி தற்சமயம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் பளாக்பெரி ஆகிய இயங்கு தளங்களில் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.


கணினி வாட்ஸ்ஆப் செயளியால் முடியாதவை


Read more
Tuesday, 27 January 2015
உலகிலேயே முதன் முதலாக, NFC தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட்


உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட் ஒன்றை, தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்.எப்.சி. (NFC Near Field Communication) தொழில் நுட்பத்தின் மூலம், இரண்டு டிஜிட்டல் சாதனங்கள், ஒன்றுக்கொன்று இணைப்பின்றி, அருகாமையில் இருக்கும் நிலையிலேயே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.
uFfS1KI.jpg?1



மொபைல் போன்களில் பரவலாகத் தரப்படும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம், நாம் மொபைல் வேலட் எனப்படும் வசதியில் பணம் செலுத்தி, மொபைல் போனை, கடைகளில் உள்ள இதனுடன் இணைந்து செயலாற்றும் சாதனத்தின் முன் சற்று அசைத்தாலே போதும்; நாம் அமைத்திட்ட பணத்தொகை அந்த சாதனத்திற்கு மாற்றப்பட்டு, அதன் மூலம் கடைக்காரரின் வங்கிக் கணக்கில் சேரும். 




எஸ்.டி. கார்ட்கள் நாம் தகவல்களைச் சேர்த்து வைக்கப் பயன்படுத்தும் புதிய சிறிய அளவிலான டிஜிட்டல் சிப்களாகும். இதில் சேமிக்கப்படும் தகவல்களை, மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்க்க வேண்டும்.


தோஷிபா, தற்போது இந்த எஸ்.டி. கார்ட்களில் என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தினைத் தருகிறது. இதன் மூலம், இதற்கான அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யப்பட்ட மொபைல் போன் முன், இந்த எஸ்.டி. கார்டைக் காட்டினால், கார்டில் எவ்வளவு இடம் உள்ளது என்ற தகவலையும், கார்டில் உள்ள போட்டோக்களின் சிறிய அளவிலான படங்களையும் காணலாம். இதனை தோஷிபா Secure Digital High Capacity (SDHC) என அழைக்கிறது. இது 8, 16 மற்றும் 32 ஜி.பி. அளவுகளில் வருகிறது.


bIPVwQj.png


இவை UHS Speed Class 1 (4K2K விடியோ பதியும் திறன் கொண்டது.) டேட்டா சேவ் செய்வதில் இது SD Speed Class 10 வேகத்தைக் கொண்டுள்ளது. நொடிக்கு 10 எம்.பி. டேட்டா மாற்றும் திறன் கொண்டது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.



0wqdr39.jpg

Read more
Friday, 23 January 2015
 உங்களுடைய அனைத்து பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற முடியும்..!

             


        நிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் இணையதளம் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது -
அது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும்.
இதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் மற்ற எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லைன் ஸைட்களை திறக்க இயலும் என்பது கூடுதல் ஆச்சர்யம்.
இணையதளம் செல்ல : https://www.dashlane.com/

Dashlane ஐ  எவ்வாறு  பயன்படுத்துவது  என்ற  Video  பதிவு  விரைவில் ...! 
Read more
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி? / How to Use Credit Card

      



    நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.



எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுகொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.


கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?


வட்டியில்லா கடன் காலம்


கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.


மினிமம் தொகை


மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.


பணமாக எடுத்தல்


கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.


இஎம்ஐ வசதி


கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.


கடன் அளவு


நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.


ஆஃபர்கள்


பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்


கேஷ் பாயிண்ட்ஸ்


கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.

சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.


அனுமதிகளில் கவனம்


தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்.


திரும்ப ஒப்படைப்பது


கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.


சிபில் எச்சரிக்கை


நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.


வருமானத்தையே செலவு செய்கிறோம்


கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.



கிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்


1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.

2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.

3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.

4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.

6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.

7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.

8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.

9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.

10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.

Read more
Wednesday, 24 December 2014
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?




                சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .



மற்ற நாடுகளின் முதல் எண்கள் :

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons
Read more
Tuesday, 16 December 2014
இனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்



        ஆம், இந்தப் பிரேஸ்லெட் அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் கையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம். இந்தப் பிரேஸ்லெட்டை உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்கள் கையிலுள்ள இந்தப் பிரேஸ்லெட் மொபைல் மற்றும் டேப்லெட்டின் திரையை ப்ரொஜெக்டர் மூலம் உங்கள் கையில் ப்ரொஜெக்ட் செய்து காண்பிக்கிறது. இதன் மூலமாக மெயில் செக் பண்ணலாம், கேம்ஸ் விளையாடலாம், அழைப்பை ஏற்கலாம், புத்தகம் படிக்கலாம்.

நோட்டிபிக்கேஷன் வந்தால் வைபிரேட் ஆகும். LED லைட் மூலமும் தெரியப்படுத்தும். வை-பை, ப்ளூடூத், மினி யூஎஸ்பி தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகயிருக்கும் இந்தப் பிரேஸ்லெட்டின் புரோமோ வீடியோ யூடியூப்பில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்த வீடியோவை 43 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

அடுத்த வருடம் ஜூன் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

16ஜிபி நினைவகத்துடனும், 32 ஜிபி நினைவகத்துடனும் வெளிவருகிறது.

இதன் விலை $400 அமெரிக்க டாலர்களாம் (அடேங்கப்பா இதுக்கு ஒரு பவுன் தங்கத்துல பிரேஸ்லெட்டை செஞ்சு மாட்டிகலாம்!). இந்திய மதிப்பில் சராசரியாக 25ஆயிரம் ரூபாய்!

இந்தப் பிரேஸ்லெட்டின் மாதிரி வடிவம் மற்றும் செயல்பாடு எப்படி இருக்கும் என அனைவருக்கும் ஆர்வமாக இருக்கிறதல்லவா?


Read more