Open top menu
Monday 13 October 2014




             இணையதளங்களை  பயன்படுத்துவோர் தங்களின் அடையளம்  திருட்டுப்  போவது சமீபகாலங்களில்  அதிகரித்துள்ளது . இதனால்  பெரும் பொருள்  இழப்புடன் , மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது . செய்யாத  குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது . வளர்ந்த நாடுகளிலும் , வளரும்   நாடுகளிலும் ,இணையதளங்களில் இந்த அடையாள திருட்டு அதிகரித்து  வருகிறது . அடையாள திருட்டு மூலம் மோசடி செய்வதாக இணையதளம் பயன்படுத்துவோரின் 37 சதவிதம் பேர் புகார் செய்துள்ளனர் .


               இந்தியாவை  பொறுத்தவரை , ஆர்குட் , பேஸ்புக் , போன்ற இணையதளங்களை சாட்டிங்குக்கு பயன்படுத்துவோர் மற்றும் இ -மெயில் பெறுவோரின் அடையாளங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது . இணையதளங்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை அறிந்து கொண்டு , அதன் மூலம் பெரும் மோசடிகள் , குற்றங்கள் நடத்தப்படுகின்றன .  அடையாளங்களைத்  திருடியோர் , அதன் பிறகு அந்த இணைய தளத்தையே முடக்கிவிடும்  நிலையும் ஏற்படுகிறது . இது தொடர்பாக சமிப காலமாக அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன .





          சமீபத்தில் மும்பையை  சேர்ந்த இளைனர் ஒருவர்  இணைய தள நண்பன் மூலம்  கடத்திச்  செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் . இதைத்  தொடர்ந்து , இது  தொடர்பான  விவகாரங்களில்  சைபர்  கிரைம் போலிசார் அதிக  கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர் .


     பாஸ்வேர்டு , ATM PIN,  உள்ளிட்ட   அடையாளங்களைத் திருடி  மோசடி செய்வோர் அதிகரித்து  உள்ளனர். அதனால் இணையத்தில் பொருள் வாங்க விரும்புவோர் பாதுகாப்பாக வாங்கவும் .




Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments