Open top menu
Sunday 1 February 2015

      
    'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது. அதிக கொள்ளளவு உள்ள படங்களையும், வீடியோக்களையும் உடனுக்குடன் மிக விரைவாக அனுப்ப, வாட்ஸ் அப் என்ற, செயலி உதவுகிறது. இத்துடன், பேசும் வசதியையும் இணைக்க, நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், குறிப்பிட்ட சிலரிடம், சோதனை அடிப்படையில், 'வாட்ஸ் அப்'பில் பேசும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. 


யினும், பொதுவான பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இதுகுறித்து, 'வாட்ஸ் அப்' நிறுவனம் சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், நேற்று முதல் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் 'வாட்ஸ் அப்'பில் பேசிக் கொள்ள வசதி கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தில் (ஆணை தொகுப்பில்) இயங்கும், 'வாட்ஸ் அப்' செயலி வைத்துள்ள அனைவரும், அதன் மூலம் நண்பர்களிடம் பேச முடியாது. இதற்காக, 'வாட்ஸ் அப்' வலைதளத்தில் நுழைந்து, மேம்படுத்தப்பட்ட, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே அதை பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேசுவதற்காக இணைய முடியாது. எதிர் தரப்பில் பேசுபவரிடமும், அந்த பைல் இருந்தால் மட்டுமே பேசலாம். அவ்வாறின்றி, நண்பருக்கு அந்த பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேசலாம். உள் அழைப்பு, வெளி அழைப்பு எண்களும் ஸ்மார்ட் போனைப்போலவே இதிலும் சேமிக்கப்படும். கம்ப்யூட்டரிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் வாட்ஸ்அப்-வெப் சேவையை சில வாரங்கள் முன்பு வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருந்தது. வாட்ஸ்அப்பை, பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது முதல் இதுபோன்ற அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
Tagged
Different Themes
Posted by Skyfree Seenu

I Hope,You Like this Post. For More Post Like TechNews,Computer Tutorials, Tips, Security and Science News Just Subscribe. If You Like this Post Please Share to Your Friends.

0 comments